ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இடைக்கால அரசாங்கம்!

241 0

ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க உத்தேசித்து வருவதாக ஐ.தே.க வின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளபடுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் இது குறித்த தீர்மானிக்க இரகசியப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ள்ளதாகவும் தொடர்ந்து பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் அத்தரப்புகள் தெரிவித்தன.

இதேவேளை, ஜே.வி.பி யினர் மைத்திரி மஹிந்த அணிக்கோ அல்லது ரணில் அணிக்கோ தமது ஆதரவை ஒருபோதும் வழங்கப்போவதில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் இடக்கால அரசாங்கத்தில் இணையவருமாறு ஐக்கிய தேசியக் கட்சி ஜே.வி.பியுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Leave a comment