ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் மூலம் உழைக்கப்பட்ட பணம் மூலம் 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டிய குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு டிசம்பர் 13ம் திகதி விசாரணைக்கு எஎடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி உத்தரவிட்டுள்ளார்.
அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு சாட்சியாளர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் மூலம் உழைக்கப்பட்ட பணம் மூலம் கோட்டே, தெஹிவளை மற்றும் ராஜகிரிய ஆகிய பிரதேசங்களில் 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டியதன் ஊடாக பண மோசடி சட்டத்தின் கீழ் தண்டனைக்குறிய குற்றம் என்று தெரிவித்து வெலே சுதா, அவரது மனைவி மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.