முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை கடற்படையினர் மீண்டும் இன்று புதன் கிழமை காலை முற்கம்பிகளினால் மூடியுள்ளதாகவும் இதனால் அப் பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார்.
முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை கடந்த 21 ஆம் திகதி திடீர் என கடற்படையினர் முற் கம்பிகள் கொண்ட வேலியினால் வீதியை இடை மறித்து மூடிமையால் மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்த நிலையில் குறித்த வீதியை கடற்படையினர் மீண்டும் திறந்து விட்டனர்.
இந்த நிலையில் குறித்த வீதியை கடற்படையினர் மீண்டும் இன்று புதன் கிழமை காலை முற்கம்பிகளினால் வீதியை மூடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடற்படையினரின் குறித்த செயற்பாடுகளை கண்டித்து முள்ளிக்குளம் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து முள்ளிக்குளத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்தனர்.