இன்றைய தினமும் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஏற்கனவே நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் ஹேமசிறி பெர்ணான்டோ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் எஸ்.ஆர்.ஆடிகல நிதியமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.