மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார் அரசியலில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இப்ராஹிம் அன்ஸார் இராஜதந்திர சேவைகளில் ஈடுப்படுவதை இடைநிறுத்தி விட்டு முழுநேர அரசியலில் ஈடுப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்ஸார், கடந்த நான்காம் திகதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மஹிந்த எதிர்ப்பு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான இப்ராஹிம் அன்ஸாரிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்ஸார் மீது தாக்குல் நடத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தரப்பினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.