சிறீலங்கா தொடர்பாக ஐநா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறீலங்கா அரசாங்கத்தினால் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரும் மற்றும் கொமன்வெல்த் பணியக விவகாரங்களுக்கான இணை அமைச்சருமான அலோக் சர்மா, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டு அறிந்துகொண்டார்.
ஐநாவின் 71ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளச் சென்ற சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலோக் சர்மாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினார். இதன்போதே பிரித்தானிய அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்தார். இச்சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறிலங்கா அரசாங்கத்தினால் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இது நல்லதொரு சந்திப்பாக இருந்ததென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்துள்ளர்.