சிறீலங்கா இராணுவக் கொமாண்டோக்களால் மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு மற்றும் பணயக் கைதிகளை மீட்கும் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்க்காகம் கூட்டுப்பயிற்சியின் ஒரு கட்டமாகவே இப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
48கொமாண்டோக்கள் 6 குழுக்களாகப் பிரிந்து இத்தாக்குதல் ஒத்திகையை நடாத்தின.
விமானத்துக்குள் இருந்தும், விமான நிலையக் கட்டடத்துக்குள் இருந்தும், பணயக் கைதிகளை மீட்கும் வகையில் இந்த ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
வான்வழியாகத் தரையிறக்கப்பட்ட கொமாண்டோக்களின் பயிற்சிகள் தனியாகவும், வாகனங்களில் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தும் கொமாண்டோக்களின் ஒத்திகை தனியாகவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இராணுவத்தளபதி கிரிசாந்த டி சில்வா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.