அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழில் போராட்டம்

224 0

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணம், நெல்லியடியில் இன்று (சனிக்கிழமை) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தை சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடுசெய்திருந்தது.

இதன்போது “அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச்செய், புதிய பயங்கரவாத முறியடிப்புச் சட்டத்தை மீளப்பெறு” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதற்கமைய பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கைதிகள் இணைந்து மேற்கொண்டுவருகின்ற போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இப்போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment