ஐ.தே.காவுக்கு காலை 8 மணி வரை அவகாசம் – விமல்

294 0

நாளை காலை 8 மணி வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு அவகாசம் வழங்குவதாகவும், அதற்கு முன்னர் அலறி மாளிகையிலிருந்து வெளியேற்றுமாறும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளியேறாவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். சற்று முன்னர் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கட்சிகளின் ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை இன்று 4 மணியாகும் போது அலறி மாளிகையை ஒப்படைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மான் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment