இலங்கையில் வேகமாக பரவும் ஆட்கொல்லி நோய்

298 0

rajithaமுதல் கட்டமாக 47 வகையான மருந்து பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேசிய ஒளடத கொள்கைக்கு அமைவாக இந்த விலை குறைப்பு அமைவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எச்.ஐ.வி தொற்றுள்ள நோயாளர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது 2,436 எச்.ஐ.வி நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் எய்ட்ஸ் நோயை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், அதற்கான வேலைத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்காக 30 சிகிச்சை மத்திய நிலையங்கள் சுகாதார அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.