ஹோமாகம பிரதேசத்தில் புதிய இராணுவ அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடைமைகள் கண்காட்சிப் பொருளாக வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில் பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அடையாள அட்டை உள்ளிட்ட உடைமைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
குறித்த பொருட்கள் தம்மிடம் இருப்பதாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன அண்மையில் தெரிவித்திருந்த நிலையிலேயே , குறித்த ஆதாரங்களை இராணுவத்தின் வரலாற்று பாடங்களை படிப்பவர்களுக்காக, அழிக்காது பாதுகாத்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.