தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிப்பு

350 0

201609231546453551_tamil-prisoners-in-sri-lanka-go-on-hunger-strike_secvpfஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21 ஆம் திகதி முதல் 20 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தனர்.

தம் மீதான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும், தமது வழக்குகளை தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களிற்கு மாற்றுமாறும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.

தமிழ் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் தலையீட முடியாது எனவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கைதிகள் சிறைக்குள் உணவுகளை தவிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ள  சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவர்களுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.