பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்தது, டீசல் விலையும் குறைந்தது

239 0

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்து ரூ.83.60 க்கு விற்பனை செய்யபடுகின்றது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 42 காசுகள் குறைந்து ரூ.83.60 க்கு விற்பனை செய்யபடுகின்றது. அதேபோல், டீசல் விலையும் 38 காசுகள் குறைந்து ரூ.78.64 க்கு விற்பனையாகிறது.  கடந்த சில மாதங்களாக விண்ணை முட்டும் அளவுக்கு எரிபொருள் விலை உச்சத்துக்கு சென்ற நிலையில், தற்போது அது ஓரளவு குறைந்து வருவது சாமானிய மக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார காரணங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்தது. அதன் விளைவாக பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்றம் கண்டது. அனைத்து தரப்பு மக்களும் அந்த விலையேற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளான நிலையில், அதன் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க மத்திய அரசு முன்வந்தது.
இதற்கிடையே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பிலும் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை குறைந்து வருகிறது

Leave a comment