தாய்வானைச் சேர்ந்த முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு தாய்வான் நீதிமன்றம் ஒன்று 18 வருட கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மேஜர் வெங் சுங் என்பவர் தாய்வான் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய வேளையில், சீனாவிற்காக உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், தேசிய சட்டம், புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சட்டங்களையும் மீறியுள்ளார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போது தெரிவித்தது.
இவர் 20 வருடங்களுக்கு முன்னர் ரகசியமான முகவராக சீனாவிற்கு அனுப்பப்பட்ட போது, தாய்வான் தொடர்பான பல தகவல்களை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் 10 வருடங்களுக்கு மேலாக சீனாவிற்கு சார்பாக உளவு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளமை தற்போது நிரூபணமாகியுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தவிர, கடந்த 2005ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன் அவர் ரகசியமான தகவல்களை சீனாவிற்கு வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.