டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லையென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.
எல்லை நிர்ணய செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமாணி அறிவித்தலுக்கு ஒரு மாத காலம் தேவைப்படும்.
இதேவேளை தேர்தல் தொடர்பான செயற்பாடுகளுக்கு 75 தொடக்கம் 90 நாட்கள் தேவைப்படும்.
இந்த நிலையில் இந்த வருடத்தில் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.