மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரை பௌத்த பிக்கு ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று(23) மதியம் மயிலம்பாவெளி பிரதான வீதியில் உள்ள மீள்குடியேற்ற காணியில் இருந்த அரச மரம் ஒன்றின் கிளைகளை வெட்டுவதற்கு அனுமதி வழங்கியதாக கூறி அவ்விடத்திற்கு சென்ற செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களை அங்கு நின்ற மட்டக்களப்பு மங்களகராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவர்கள் பிரதேச செயலாளரை மிக மோசமான தகாத வார்த்தைகளால் ஏசியதுடன் அவரை கண்ணத்தில் அரைய முற்பட்டதுடன் அவரது சேட்டை பிடித்து அடிக்க முற்பட்ட போது அதனை அவ்விடத்தில் நின்ற பொலீசார் தடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
மட்டக்களப்பு மயிலம்பாவெளி பிரதான வீதியில் கடந்த 30 வருடங்களாக இராணுவ முகாமாக இருந்த பிரதேசம் தற்போது விடுவிக்கப்பட்டு அங்கு காணி உரிமையாளர்கள் குடியேறியுள்ள நிலையில் பொது மக்களின் குறித்த காணியில் இராணுவத்தினர் வைத்து வழிப்பட்ட சிறிய புத்த கோயில் ஒன்றும் அதன் அருகில் பெரிய அரச மரம் ஒன்றும் உள்ளது.