ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
மீண்டும் யுத்தம் ஒன்று உருவாகுவதற்கு யாரும் வாய்ப்பளிக்கக் கூடாது.
அதற்கான ஏற்பாடுகளை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் நல்லிணக்கத்திற்கான பெரும் பங்களிப்பை கடந்த அரசாங்கமே வழங்கியதாக கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டினார்.