ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலைசதித்திட்டத்தில் இந்தியா ‘ரோ” புலனாய்வு பிரிவுக்கு தொடர்புள்ளதாக ஜனாதிபதி கூறியதாக அமைச்சர்கள் நால்வர் இந்திய ஊடகத்திற்கு அறிவித்தார்கள் என்பதற்காக, நான்கு அமைச்சர்களுக்கும் குறித்த அமைப்புடன் தொடர்புள்ளது என குற்றஞ்சாட்ட முடியாது. அவ்வாறான குற்றசாட்டுக்களை ஏற்றக்கொள்ளவும் முடியாது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
‘ரோ” அமைப்பு என்பது இந்தியாவின் புலனாய்வு பிரிவாக அமைவதோடு அதிக அனுபவமும் திறமைப்பெற்ற அதிகாரிகளை கொண்ட அமைப்பாகும். அவ்வாறான அமைப்பு இலங்கை ஜனாதிபதியை கொலை சதித்திட்டம் செய்வதற்கு வாய்ப்பு இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்னார்.
சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்கிழமை ஐக்கிய தேசிய கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைம்சரவையில் கலந்தரையாடப்படும் விடயங்களை தனிப்பட்ட ரீதியில் ஊடகங்களுக்கு தெரிவிப்தென்பது சட்ட விரோதமான செயற்படாகும். ஊடகவியலாளருடன் தொடர்புக்கொண்டு இதுபோன்ற தகவலை பரிமாற்றிக்கொண்டார்கள் என்பதற்காக அவர்கள் நாள்வரையும் ‘ரோ” அமைப்புடன் தொடர்புப்பட்டவர்களாக அடையாளப்படத்தவும் முடியாது.என தெரிவித்தார்.