நிதி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியை எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாவட்ட மேலதிக நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செய்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட விசாரணைகளின் படி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நேற்று கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்து அணியுடனான போட்டித் தொடரின்போது ஔிபரப்பு உரிமத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.