இருதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட 47 மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
தேசிய ஒளடத கொள்கைக்கு அமைவாக இலங்கையில் முதன்முறையாக இவ்வாறு மருந்து பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை அமுலாக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் எதிர்காலத்தில் குருதி பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு எடுத்து வருவதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின தெரிவித்தார்.