மிருகங்களை பாதுகாக்க நடவடிக்கை

309 0

worldenvironmentday04அருகிவரும் மிருகங்களை பாதுகாப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இது குறித்து பேச்சுவர்த்தை ஒன்றினை நடத்தியுள்ளனர்.

சட்டவிரோதமாக யானை தந்தங்களை கடத்தும் நோக்கில் ஒவ்வொரு வருடமும் 20 ஆயிரம் யானைகள் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 7 வருடகாலப்பகுதியினுள் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள யானைகளில் 30 சதவீதமானவை காணமல் போயுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அபாயகரமான நடவடிக்கைகளில் இருந்து யானைகளை பாதுகாப்பதற்கு வலுவான சட்டங்கள் அவசியம் என ஜீவகாருணிய அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

இந்தவருடம் தென்னாபிரிக்க நகரான ஜொஹனஸ்பேகில் ஆபிரிக்க நாடுகளின் அருகிவரும் உயிரினங்கள் தொடர்பான மாநாடு நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டின் போது பல ஆலோசனைகள் ஆப்பிரிக்க நாடுகளினால் முன்வைக்கபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.