பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான எவ்றி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் 22 ஆவது ஆண்டு விழா நேற்று (20.10.2018) சனிக்கிழமை நண்பகல் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 1994 ஆம் ஆண்டு மன்னார் கடற்பரப்பில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லக்சிகன் அவர்களின் உறவினர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து பிரதம விருந்தினரும், எவ்றி தமிழச் சங்க நிர்வாகிகளும், தமிழ்ச்சோலை ஆசிரியர்களும் மங்கலவிழக்கினை ஏற்றினர்.
சிறப்பு உரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்களும் தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் சார்பில் திரு.சாந்திக்குமார் அவர்களும், தமிழ்ச்சோலை தலைமைப் பணியகத்தின் சார்பில் திரு.அகிலன் அவர்களும், எவ்றி மாநகர முதல்வர் குசயnஉளை ஊhழரயவ அவர்களும், மாநகர உறுப்பினர்களும் உரையாற்றியதுடன் தமிழ் தேர்வுகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி மதிப்பளித்தனர். அத்துடன் வளர் தமிழ் 12 வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.
எவ்றி தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனம், நாடகம், வில்லுப்பாட்டு என்பன மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. அனைத்து மாணவர்களும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழ – ஊடகப்பிரிவு)