சிரியாவின் கிழக்கு அலபோவில் புதிய இராணுவ நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்துள்ளதாக சிரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.
போராளிகளின் கட்டுப்பட்டில் உள்ள இந்த பிரதேசத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.
ஒருவார காலமாக கடைப்பிடிக்கப்பட்ட யுத்த நிறுத்தம் நேற்று முன்தினம் இரவுடன் முறிவடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து உடனடியாக இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 13 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இதேவேளை, போராளிகள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்த்துகொள்ளுமாறு பொது மக்களுக்கு இராணுவம் வேண்டுகோல் விடுத்துள்ளது.
இதேவேளை, தோல்வியடைந்த யுத்த நிறுத்தினை வலுவான முறையில் மேற்கொள்வது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
ரஷ்யா சிரிய அரசாங்கத்திற்கு தமது ஆதரவினை தெரிவித்து வரும் அதேவேளை, அமெரிக்கா எதிர் தரப்பினருக்கு குறிப்பிடத்தக்கது.
சிரிய அரசாங்கம் வானூர்தி தாக்குதல்களை நிறுத்துவதற்கு ரஷ்யா சிரிய தரப்பினருக்கு அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலார் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.