தகவல் அறியும் சட்டம்மூலம் வவுனியாவில் தகவல்களை அறிய முடியவில்லை!

364 0

வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய அலுவலகங்களுக்கு தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு ஒரு மாதம் கடந்த நிலையிலும் இன்று  வரையில் தகவல்கள் வழங்கப்படவில்லை.இவ்வாறு சில அரச அலுவலகங்களுக்கு  தகவல் அறியும் சட்டத்தினூடாக கோரப்பட்ட தகவல்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

கடந்த மாதம் (21.09)ஆம் திகதி பதிவுத் தபாலில் அனுப்பிவைக்கப்பட்ட தகவலுக்கே பதில் அனுப்பிவைக்கப்படவில்லை.

இவ்வாறு ஏனைய திணைக்களங்களான தமிழ் தெற்கு பிரதேச சபை, வவுனியா பிரதேச செயலகம் ஆகியவற்றிற்கு அனுப்பிவைக்கப்பட்ட தகவல்களுக்கு குறித்த திணைக்களங்களிலிருந்து பதில் கிடைக்கப்பெற்றபோதிலும் பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு இன்று வரையில் பதில் வழங்கப்படவில்லை.

இவ்வாறு மாவட்டத்தின்  தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக அரச தலைவர் தகவல் அறியும் சட்டத்தினை உயரிய சபையாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றி மக்களுக்கான தகவல்களை இலகுவில் பெற்றுக்கொள்வதற்கு வழிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டபோதிலும் அரச நிர்வாகத்திலுள்ள சில அதிகாரிகளுக்கு தகவல் அறியும் சட்டத்தின் அறிவு வழங்கப்படவில்லை.

அல்லது தகவல் அறியும் சட்டத்தினை சரியான முறையில் பயன்படுத்தத் தவறியுள்ளார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இச் செயற்பாடானது மக்களுக்கு தகவல்களை வழங்க மறுக்கும் செயற்பாடாகவே காணப்படுகின்றது.

தகவல் அறியும் சட்டத்தினூடாக ஒருவரின் தகவல் கோரிக்கைக்கு 14 நாட்களுக்குள் தகவல்கள் வழங்கப்படவேண்டும் சிலவேளைகளில் தகவல்களை வழங்குவதற்கு நாட்கள் தேவைப்படுமாக இருந்தால் 21 நாட்களுக்குள் தகவல்களை வழங்கு முடியும் எவ்வாயினும் தகவல் கோரியவருக்குத் தகவல்களைத் தெரியப்படுத்தப்படவேண்டும் என்று தகவல் அறியும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment