கிளிநொச்சி சந்தையை புனரமைக்க நிதியுதவி – விஜயகலா

362 0

720x40443தீப்பரவலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பொதுச் சந்தையை மீள நிர்மாணிப்பதற்காக 10 கோடி ரூபாவினை ஒருக்கீடு செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் சேத விபரங்கள் தொடர்பான தரவு விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் அவர்களுக்கான நட்டஈடு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.