சர்வதேச நாடுகளுடன் நல்லிணக்கமான உறவினை பேணுவதன் மூலம் சிறந்த எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்வது அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
அமெரிக்க, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொது அமர்வில் இலங்கையின் செயல்பாடுகள் தொடர்பில் சர்வதேச தலைவர்கள் தமது திருப்தியினை வெளியிட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு மேலும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.