முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ பி ஜெயசுந்தர ஆகியோர் பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகினர்.
திவி நெகும திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை உள்ளக வானூர்தி போக்குவரத்துக்கு பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவி நெகும திணைக்களத்திற்கு சொந்தமான நிதியை உள்ளக வானூர்தி போக்குவரத்துக்கு பயன்படுத்தியதன் மூலம் பதினைந்து கோடியே 54 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்;பட்டுள்ளது.