இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக தரங்ஜித் சிங் நியமனம்

383 0

tharanjith-sinh

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக தரங்ஜித் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் வை.கே.சிங்ஹவின் பதவி காலம் நிறைவடைந்துள்ள நிலையிலேயே, தரங்ஜித் சிங் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 வருட வெளிவிவகார அனுபவங்களை கொண்ட தரங்ஜித் சிங், 1988ஆம் ஆண்டு இந்திய வெளிவிவகார சேவையில் இணைந்துக்கொண்டுள்ளார்.

2000ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவின் பிரதம அதிகாரியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இராஜதந்திர அதிகாரியாக பல்வேறு நாடுகளிலும் கடமையாற்றிய தரங்ஜித் சிங், ஐக்கிய நாடுகளுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதியாகவும் கடமையாற்றியுள்ளார்.
1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ஆம் திகதி தரங்ஜித் சிங் பிறந்துள்ளார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொடர்பாடல் தொடர்பான பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.