ஹம்பாந்தொட்டை துறைமுகம் உட்பட இலங்கை கடல் பிரதேசங்களுக்குள் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் மற்றும் யுத்தக் கப்பல்கள் பிரவேசிக்கின்றதா என்பதை கண்காணிப்புச் செய்ய 39 மில்லியன் டொலர் பெறுமதியான கடல் கண்காணிப்பு “ரேடார்” உபகரணமொன்றை இலங்கை அரசுக்கு வழங்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த உதவி அமெரிக்க இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ் இலங்கை அரச அதிகாரிகளிடம் இதனை அறிவித்துள்ளார்.
ஹம்பாந்தொட்டை துறைமுகம் சீன இராணுவம் மற்றும் கடற்படை என்பவற்றின் முகாமாக அமைப் பெற்றுள்ளதாகவும், அமெரிக்க புலனாய்வுத் துறை மூலம் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்க உப ஜனாதிபதி மைக் ஸ்பென்சர் வொஷிங்டனில் அண்மையில் தெரிவித்துள்ளதாகவும் இராஜாங்க செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.