இலங்கை – இங்கிலாந்து இடையிலான 4-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 3-0 என தொடரையும் கைப்பற்றியது.
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவிற்கு வந்தது. 2-வது, 3வது போட்டியில் மழை பாதித்தாலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே பல்லேகலே மைதானத்தில் நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் டிக்வெலாவும், சதிரா சமரவிக்ரமா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.