கிளிநொச்சி பொதுச்சந்தை வழமைபோல் நாளை இயங்கும் என, கரச்சி பிரதேச சபைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாளையதினம் கிளிநொச்சி பொதுச்ச்சந்தையினை மூடவேண்டும் என சந்தை வர்த்தக சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கை கிளிநொச்சி கரச்சி பிரதேச சபைச் செயலாளர் கம்சநாதனால் மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் தனிப்பட்ட ரீதியில் குறித்த பேரணிக்கு ஆதரவு வழங்குவதானால், அமைதியான முறையில் வழங்க முடியும் எனவும், ஆனால் சந்தை நடவடிக்கைகள் வழமைபோல் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.