பாகிஸ்தானில் நில நடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவு

296 0

பாகிஸ்தானில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. 

பாகிஸ்தானில் நேற்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 5.3 புள்ளிகளாக பதிவானது. தஜிகிஸ்தான்-ஸின்ஜியான் எல்லைப்பகுதியில், 120 கி.மீ. ஆழத்தில் இந்த நில நடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இஸ்லாமாபாத், பெஷாவர், சுவாட், புனிர், சாங்கலா, மலாகண்ட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் பீதி அடைந்தனர். அவர்கள் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

இருப்பினும் இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.நில நடுக்கம் தொடர்பாக டுவிட்டரில் மக்கள் பதிவுகள் வெளியிட்டனர்.

Leave a comment