பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், கொழும்பில் 9ஆவது தடவையாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியுற்றது.
கடந்த வருடம் மார்ச் 31ம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் கலாவதியாகியதையடுத்து சம்பள உயர்வு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டு அல்லது மூன்று கட்ட பேச்சுவார்த்தையின்போது பெருந்தோட்ட கம்பனிகளால் தொழிற்சங்கத்தால் கோரிக்கை விடுத்து சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ளாததையடுத்து, மலையகத்தில் ஆர்ப்பாட்டங்கள், சத்தியாகிரக போராட்டங்கள், கையெழுத்து வேட்டை போன்ற கோரிக்கையான ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.
அத்தோடு தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததோடு மெதுவான பணி செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டனர். தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட கொழுந்துகள் தொழிற்சாலை முன்பதாகவும், கொழுந்து மடுவங்களிலும் கொட்டப்பட்டதுடன் கொழுந்தினை தொழிற்சாலைக்கு எடுத்து செல்லப்படாமல் காய்ந்து கருகின.
இதனால் தோட்ட தொழிலாளர்கள் பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கியதோடு கடன் சுமையிலும் உள்வாங்கப்பட்டனர்.
இந்நிலையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், கொழும்பில் 9ஆவது தடவையாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியுற்றது.