பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றிற்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத் தருமாறு கோரி கம்பனிகளுக்கெதிராக மலையகத்தின் பல பகுதிகளிலும் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.அந்த வகையில் இறம்பொடை வெதமுல்ல தோட்டத் தொழிலாளர்கள் நாவலப்பிட்டி வெஸ்டோல் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நாவலப்பிட்டி கெட்டபுலா தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அடம் பிடிக்காதே கண்மூடித் தனமாக நடந்து கொள்ளதே” “உயர்த்திக் கொடு உயர்த்திக் கொடு தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்திக் கொடு” “முதலாளி சமமேளனமே அடிக்காதே அடிக்காதே தொழிலாளர் வயிற்றில் அடிக்காதே” “முதலாளி சம்மேளனமே உழைப்பது நாங்கள் வாழ்வது நீங்களா” “ஏமாற்றாதே ஏமாற்றாதே தொழிலாளர்களை ஏமாற்றாதே” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் “அண்ணாச்சி அண்ணாச்சி ஆயிரம் ரூபா சம்பளத்திற்கு என்னாச்சி” என்றவாறு கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.