இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையிலுள்ள சகல ஊழியர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தக் கடிதத்தை நேற்று (19) ஒப்படைத்துள்ளதாகவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இலங்கை முதலீட்டுச் சபை தொடர்பான சட்டத்துக்கு அமைய அச்சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பவற்றின் பணிப்பாளர் சபைகள் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.