கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள கண்டாவளை மற்றம் புளியம்பொக்கணை ஆகிய கிராமங்களிற்கு இடைப்பட்ட காட்டு பகுதியில், பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றம் ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது,
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன அவர்களின் கட்டளைக்கமைய, கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயவர்த்தன அவர்களின் தலைமையலான குழுவினர் மேற்கொண்ட திடீர் சோதனையின்புது குறித்த காட்டு பகுதியிலிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 2 சந்தேக நபர்களும்கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 10 ஊள்ளுர் துவக்குகள் மற்றும் ரி 56 ரக துப்பாக்கி ரவைகள் 68, ஈய துவள்கள் 60 என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவுற்றதும், சந்தேக நபர்களையும், மீட்கப்பட்ட பொருட்களையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.