கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள தம்பகாமம் பகுதியில் மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் அமைக்கப் பெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் நிதியுதவியுடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்ற வீடுகளில் 105 வீடுகள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்டன.
இதில் தம்பகாமம் பகுதியில் காணிகளற்ற 59 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
இதில் வீட்டுத்திட்டத்தை நிறைவு செய்த பயணாளிகளுக்கான வீடுகள் வழற்கும் நிகழ்வு நேற்று பகல் 9.30 மணிக்கு நடைபெற்றது.
பிரதேச செயலர் திருமதி ப.ஜெயராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட மேலதிக அரச அதிபர் எஸ்.சத்தியசீலன் முதன்மை விருந்தினராகவும் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு வீடுகளை வழங்கிவைத்தனர்.