பேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை!

244 0

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என இந்தியா கூறியுள்ளது.

தெரியாது

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராவேஷ் குமார் கூறியதாவது: அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், விளக்கம் அளித்து உள்ளார். இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை. இந்தியா வந்த பின்னர், அலுவலக கூட்டத்தில் பங்கேற்றார். சுஷ்மாவை அவர் சந்தித்தாரா என்பது குறித்து எனக்கு தெரியாது.

விளக்கம்

தேச நலனை கருத்தில் கொண்டே ரஷ்யாவிடம் எஸ் 400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது. நமது கொள்கைகள் மற்றும் எண்ணத்தை அமெரிக்காவிடம் தெரிவித்து விட்டோம். இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நமது எதிர்பார்ப்புகளையும் அந்நாட்டிடம் தெரிவித்து விட்டோம். இந்தியாவை பாதிக்க வேண்டும் என்பதற்காக ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கவில்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். பிரான்சிடம் வலுவான நட்பை கொண்டு உள்ளோம். இந்தியாவின் பிராந்திய நட்பு நாடு. ரபேல் விவகாரம், இந்தியா பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான உறவை பாதிக்காது.

நடவடிக்கை

பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளோம். இதனால், தான் இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. தனது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் பேச்சுவார்த்தைக்கான ஆக்கப்பூர்வான சூழ்நிலையை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும்.

விசா விவகாரம்

எச்1 பி விசா விவகாரம் முக்கியமானது. இது குறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போதும் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த விசாவை தவறாக பயன்படுத்துவதை தடுக்க அமெரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment