முதல்வரின் பாராட்டு விழாவுக்காக உணவின்றி வெயிலில் காத்திருந்த மாணவர்கள் 

281 0

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களின் வேலைவாய்ப்புகளில் விளை யாட்டு வீரர்களுக்கு 2% உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த ஆக.15-ல் அறிவித்திருந்தார்.

இதற்காக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து விளையாட்டு சங் கங்கள் சார்பில் முதல்வருக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் மாலை பாராட்டு விழா நடந்தது. இவ்விழாவின்போது பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர் கள் நேற்று முன்தினம் மதியத்துக்கு முன்பே உள்விளையாட்டு அரங்கம் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். இருப் பினும் மாலை s4.30 மணி வரை அவர்கள் யாரும் மைதானத்துக்குள் அனுமதிக்கப் படவில்லை. இதனால் மாணவ – மாணவி கள் வெயிலில் பல மணிநேரம் காத்திருக்க நேர்ந்தது. மேலும் விழாவின்போது மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும், அதனால் யாரும் உணவு எடுத்து வர வேண்டாம் என்றும் பல பள்ளிகளின் நிர்வாகத்தினர் மாணவர்களிடம் கூறியிருந் தனர்.

இதனால் மாணவர்கள் பலரும் உணவு எடுத்துச் செல்லவில்லை. அதே நேரத்தில் விழா ஏற்பாட்டாளர்களும் சரியாக உணவு வழங்கவில்லை. நீண்டநேரம் உள் விளையாட்டு அரங்கில் காத்திருக்க வைக்கப்பட்ட அவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 6.30-க்கு பிறகே தொடங்கியது. அதன்பின் 8 மணிக்குப் பின்னரே அவர்கள் தங்களின் பள்ளி களுக்கு திரும்பினர். இதனால் விழாவுக்கு வந்த மாணவர்கள் பசி மற்றும் வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Leave a comment