அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் குஜராத்தியர்கள் ஆடிய நவராத்திரி நடனத்தை கவனித்த அமெரிக்க போலீஸ்காரர் ஒருவர் அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி பண்டிகை. இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள்.
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியை முன்னிட்டு, அங்கு வசிக்கும் குஜராத்தியர்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடி நடனமாடி மகிழ்வார்கள்.
இந்நிலையில், நேற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் குஜராத்தியர்கள் ஒன்றுசேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த அமெரிக்க போலீஸ்காரர் குஜராத்தியர்கள் நடனமாடுவதை கண்டார். உடனே அவருக்கும் ஆர்வம் வந்துவிட்டது.
பணியை மறந்து, அவர்கள் ஆடும் அழகை ரசித்தார். அவர்களது ஆட்டத்தை கூர்ந்து கவனித்தபடி உற்சாகமாக ஆடி மகிழ்ந்தார் அந்த போலீஸ்காரர்.
குஜராத்தி இளைஞர் பட்டாளத்துடன் அமெரிக்கா போலீஸ்காரர் உற்சாகமாக ஆடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=lnQEqQ3iTnk