அபுதாபி டெஸ்ட் – ஆஸ்திரேலியா வெற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்

265 0

அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி. 

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டு வீழ்த்தினார்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டு வீழ்த்தினார்.

137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. பாபர் அசாம் 99 ரன்கள்,  சர்ப்ராஸ் அகமது 81 ரன்கள் என பொறுப்பாக ஆடியதால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து, 537 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரண்டு நாள் மீதமிருக்க, ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 491 ரன்கள் தேவை என்பதால் ஆட்டத்தில் சுவாரசியம் கூடியுள்ளது.

Leave a comment