அத்தியாவசிய மற்றும் தரமுள்ள மருந்துகள் எதுவும் சந்தையில் இருந்து நீக்கப்படவில்லை என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அத்தியாவசிய மருந்துகள் சந்தையில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட செய்தியில் எந்த உண்மைகளும் இல்லை என்று அமைச்சர் கூறினார்.
இவ்வாறான அடிப்படையான தகவல்களால் நோயாளிகள் பயம் மற்றும் சிரமத்துக்கு ஆளாவதாக டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதுவரை 73 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதால், மருந்துகளின் பயன்பாடு நூற்றுக்கு 600 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.