வரவு செலவுத் திட்ட இடைவெளியை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. வரவு செலவுத் திட்ட இடைவெளியை 5.6 வீதமாக குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.வரவு செலவுத் திட்டத்தில் அடுத்த ஆண்டுக்கான அரச வருமானம் 1800 பில்லியனுக்கும் அதிகமான தொகையை ஈட்ட முடியும் என விசேட திட்டங்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். வறுமையை இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் பிரதான வரவு செலவுத் திட்ட நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவின் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.2017 முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வறுமையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். சுங்க வரி, கலால் வரி போன்றனவற்றில் பாரியளவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.