ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளியாகவே நிதி குற்றப்புலனாய்வு பிரிவு செயற்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளின் நிமித்தமே இப் பிரிவினர் செயற்படுகின்றனர் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டுக்களை தொடுத்து தமது நோக்கத்தினை நிறைவேற்ற முயற்சித்த ஐக்கிய தேசிய கட்சியின் எண்ணம் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
என் மீ து பொய்யான நிதிமோசடி குற்றச்சாட்டி அரசாங்கம் அநீதி இழைத்துள்ளது. நிதிகுற்றப்புலனாய்வு பிரிவு ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கங்களை நிறைவேற்றும் ஒரு அமைப்பு மாத்திரமே அந்நிறுவனம் மக்களுக்க சேவை வழங்கும் அமைப்பு அல்ல.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மக்களுக்காக உருவாக்கப்பட்ட தாபனங்கள் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேவைகளுக்கு மாத்திரமே செயற்படுகின்றது இந்நிறுவனங்களில் சாதாரண மக்கள் ஒருபோதும் நீதியினை எதிர்பார்க்க முடியாது. ஒரு தரப்பினரது அழுத்தங்களின் ஊடாகவே அரசாங்கம் இன்று செயற்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.