அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அவசர ஒன்றுகூடல் ஒன்றை நடத்தவுள்ளது.
வைத்திய சபை மற்றும் வைத்திய கட்டளைச் சட்டம் என்பவை தொடர்பில் சுகாதார அமைச்சர் கொண்ட வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பது குறித்த முடிவுகளை எடுப்பதற்காக இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.
குறித்த விடயத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து ஆராய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு சபை கூடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது