ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

435 0

karu-720x480நாடாளுமன்றத்தின் கௌரவத்தை பாதிக்கும் வகையில் செயற்படும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடிய போதே அவர் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த சபாநாயகர், இந்த உயரிய சபையில் உரையாற்றும் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டும் வகையில் பேசுகின்றனர். இவ்வாறான குற்றச்சாட்டுகள் நிலையியற் கட்டளையை மீறும் வகையில் அமையக்கூடாது.

உறுப்பினர்கள் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதானது அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும்.

எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நிலையியற் கட்டளையின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் எனவும் தெரிவித்தார்.