சிறீலங்காவின் இராணுவத் தளபதியாக தொடர்ந்தும் கிரிசாந்த டி சில்வா பதவி வகிப்பார் எனத் தெரியவருந்துள்ளது. கிரிசாந்த டி சில்வாவின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தற்போது சேவை நீடிப்பின் அடிப்படையிலேயே கிரிசாந்த டி சில்வா பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில் இவரின் சேவை நீடிப்புக்காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ளதுடன், இன்னும் ஆறு மாதங்களுக்கு சேவை நீடிப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது. அப்படி மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவுக்கு பதவி நீடிப்பு வழங்காவிட்டால் இவருக்குக் கீழே கடமையாற்றிவரும் மூன்று மேஜர் ஜெனரல்களில் ஒருவருக்கு சேவை மூப்பின் அடிப்படையில் இப்பதவி வழங்கப்படவேண்டும்.
அப்படி அடுத்த நிலையில் சேவை மூப்ப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவேண்டியவர் மேஜர் ஜெனரல் மலிந்த பீரிஸ் காணப்படுகின்றார். ஆனால், மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா முக்கியமான போர்க்குற்றவாளிகளில் ஒருவராவார். இவரை போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பவைக்கும் நோக்கிலேயே சிறீலங்கா அரசாங்கம் இரண்டாவது தடவையாகவும் இராணுவத் தளபதியாக நியமிக்கவுள்ளது என சந்தேகம் கொள்ள வைக்கின்றது.