ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற குறித்த கூட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த காலத் தேர்தலின் போதான விடயதானங்கள் மற்றும் குறைகளை எதிர்காலத்தில் நிவர்த்திப்பதற்காக இரு குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்களுக்கான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
ஒரு குழுவுக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைவராகவும் மற்றைய குழுவுக்கு தயாசிறி ஜயசேகர தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.