சரத் குமார குணரத்னவின் வழக்கு டிசம்பர் மாதம் விசாரணைக்கு

227 0

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட 06 பேருக்கு எதிரான வழக்கு டிசம்பர் 12ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த முறைப்பாடு சம்பந்தமாக பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட விசாரணையின் பரிந்துரை அறிக்கையை பிரதிவாதி தரப்புக்கு வழங்குமாறும் ஜிதிபதி ஜனாதிபதி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் பிரதிவாதிகளின் கோரிக்கை படி சரத் குமார குணரத்னவுக்கு டிசம்பர் 10ம் திகதி வரையான காலம் வரை வௌிநாட்டுப் பயணத் தடை விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment