அருவாக்காலு குப்பை கொட்டுதல் திட்டம்!

240 0

சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையிலும் சூழலுக்கு எதுவித பாதிப்பற்ற வகையிலுமே புத்தளம் அருவாக்காலு பகுதியில் கொழும்பு மாநகர குப்பைகளை கொட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், பொறியியலாளர் நிஹால் ரூபசிங்ஹ தெரிவித்தார்.

100 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் இதற்கு முன்னர் தொம்பே பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கழிவகற்றல் திட்டத்தை ஒத்ததாகும். இது சுகாதார பாதுகாப்புடன் கூடிய கழிவகற்றல் முறையை பின்பற்றியும் கொரியா போன்ற நாடுகளின் உயர்தர பொறியியலாளர்களின் ஆலோசனைகளுடனேயுமே உருவாக்கப்படுகின்றது எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர குப்பைகளை புத்தளம் அருவாக்காலு பகுதியில் கொட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் தற்போது தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில்  ஊடகங்களை தெளிவூட்டும் ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்றுமுன்தினம் பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அருவாக்காலு குறித்து தற்போது எழுந்துள்ள சர்ச்சைகளும் போலிப் பிரச்சாரங்களிலும் எதுவித உண்மைத் தன்மையுமில்லை. போதிய கல்வியறிவற்ற மக்களை ஏமாற்றி கொழும்பு மாநகர குப்பைகள் அங்கு கொட்டப்படுவதாகவும் வெளியேற்றப்படப் போகும் கழிவு நீரை கடலில் கலக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவையனைத்தும் போலிப் பிரச்சாரங்களேயாகும். இத்திட்டம் குறித்து நாம் முதலில் அப்பிரதேசவாசிகளை தெளிவூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தோம். அவற்றுடன் குப்பை கொட்டப்படப்போகும் இடத்திலிருந்து சுமார் 400 மீற்றருக்கு அப்பாலேயே பிரதேச மக்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இவற்றுடன் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன் குப்பை கொட்ட கூடிய பெளதீக தன்மையுடைய நிலப்பரப்பை தெரிவு செய்தோம்.

எமது மக்களுக்கு மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் சரிவு நிலையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீதொட்டமுல்லையில் பாதுகாப்பான முறையில் குப்பை கொட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. குப்பைகளை அகற்றும் போது ஏற்படும் நீர்த்தன்மையையும் நிலத்தடி நீரையும் ஒரு ஒழுங்குப்பாட்டுக்கு கொண்டுவந்திருக்கவில்லை.

இதனால் மழைக்காலத்தில் ஏற்பட்ட அழுத்தமே அந்த குப்பை மேடு சரிவடைய காரணமாகியது. அந்த நிலைமையை நாம் இங்கு சீர் செய்துள்ளோம். நிலத்தடி நீரையும், கழிவகற்றலின் போது வெளியேற்றப்படும் நீரையும் மற்றும் மழை நீரையும் நாம் முகாமைப்படுத்தியுள்ளோம். எனவே இங்கு ஒரு போதும் நீர் தேங்க வாய்ப்பில்லை.

இவ்வாறு வெளியேற்றப்படும் நீரை நாம் கடலில் கலக்க திட்டமிட்டுள்ளதாக எம்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புத்தளம் உப்பு சேகரிப்புக்கான பிரபல்யமடைந்தவொரு இடம் என்பதை நாமும் அறிவோம். இதனால் கடலில் கழிவுகள் சேர இடமளிக்கமாட்டோம். இங்கு வெளியேற்றப்படப்போகும் நீர் அருகிலேயே சுத்திரிக்கப்பட்டு எமது தேவைகளுக்கு பயன்படப்போகிறது.

மேலும் குப்பைகளை முகாமைப்படுத்தும் போது வெளியேற்றப்படும் மீதேன் வாயுவை நாம் இதுவரையில் வருவாயை ஈட்டித்தரும் முறைக்காக மீள்சுழற்சிக்குட்படுத்த திட்டமிடவில்லை. எனவே நாம் இதனையும் குறித்த பகுதியிலேயே எரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

எனவே அருவாக்காலு குப்பை கொட்டுதல் திட்டம் சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் சூழல் பாதிப்பற்ற வகையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை வருடங்களில் சகல பணிகளும் நிறைவடையும். கொரியா, சீனா போன்ற நாடுகளின் நிதியுதவி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முறையான கட்டமைப்புகள் கூடிய 25 வருடங்களுக்கான கழிவகற்றல் திட்டமொன்றே அருவாக்காலு  திட்டமாகும்.

இது தொடர்பில் சில விசமிகளால் பரப்பப்படும் வதந்திகளை மக்கள் ஒரு போதும் நம்பவேண்டாம் என்றார்.

“அருவாக்காலு குப்பை கொட்டுதல் திட்டம் ; விசமிகளால் பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம்”

Leave a comment